இந்தியாவின் அரிசி ஏற்றுமதித் திறனுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, ‘சிவப்பு அரிசியின்’ முதலாவது சரக்குப் பெட்டகமானது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப் பட்டது.
இந்த அரிசி வகையானது ‘பாவோ தன்’ - அசாம் உணவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அழைக்கப் படுகின்றது.
அசாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் ‘சிவப்பு அரிசியானது’ சாகுபடி செய்யப் படுகின்றது.
இது எந்தவொரு இரசாயன உரத்தையும் பயன்படுத்தாமல் சாகுபடி செய்யப் படுகின்றது.
இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (APEDA - Agricultural and Processed Food Products Export Development Authority) அரிசி ஏற்றுமதி ஊக்குவிப்பு மன்றத்தின் (REPF - Rice Export Promotion Forum) மூலம் அரிசி ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றது.
REPFயானது அரிசித் தொழிற்துறை, ஏற்றுமதியாளர்கள், APEDA மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
இது அரிசி உற்பத்தி செய்யும் மாநிலங்களான மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாய இயக்குநர்களைக் கொண்டுள்ளது.