இந்த ஆண்டு சீனப் பொதுவுடைமைக் கட்சியானது தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில் அந்த நாட்டில் சிவப்புச் சுற்றுலாவின் புகழானது வெகுவாக ஓங்கியுள்ளது.
2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சிவப்புச் சுற்றுலா ஆனது அந்நாட்டின் பொதுவுடைமைக் கட்சியின் வரலாற்றுடன் தொடர்புடைய கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதாகும்.
இது ஒரு நவீன சீன நாட்டினை உருவக்குவதற்காக அந்நாட்டின் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்கள் ஆற்றிய தியாகங்களைப் பற்றி மக்களுக்கு நினைவு படுத்துகிறது.