மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்கா மற்றும் பிற பொருத்தமான இடங்களில் சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்துவதை மேற்பார்வையிடுவதற்காக 9 பேர் கொண்ட அறிமுகப்படுத்தச் செய்வதை மேற்பார்வையிட 9 பேர் கொண்ட பணிக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) சிவிங்கிப் புலிகள் அதிரடிப் படையின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கும்.
இந்தப் பணிக்குழுவானது இரண்டு ஆண்டுகள் பணியில் இருக்கும்.
இந்தப் பணிக்குழுவின் உறுப்பினர்கள் சிறுத்தை மித்ராக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் குறிப்பாக அவற்றின் பாதுகாப்பு மற்றும் பொதுவான ஒரு பகுதியின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காகத் தொடர்பு கொண்டு செயல்படுவர்.