ஒரு புதிய ஊர்வனவியல் ஆய்வானது, இந்தியாவில் சிஸ்தான் மண் பாம்பின் (எரிக்ஸ் சிஸ்டனென்சிஸ்) முதல் உறுதிப்படுத்தப்பட்ட பதிவைப் புகாரளித்துள்ளது.
இந்த இனம் இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள வட தார் பாலைவனப் பகுதியில் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.
சிஸ்தான் மண் பாம்பு என்பது சிறிய, விஷமற்ற, மண்ணுக்குள் வளை தோண்டி வாழும் ஒரு பாம்பு இனமாகும்.
இது இதற்கு முன்பு ஈரான் மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே அறியப்பட்டிருந்தது, தற்போது இந்தியாவில் இதன் இருப்பு முதன்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம், இந்தியா தற்போது செம்மண் பாம்பு, சொரசொரப்பான செதில் கொண்ட மண் பாம்பு, விட்டேக்கரின் மண் பாம்பு மற்றும் சிஸ்தான் மண் பாம்பு ஆகிய நான்கு மண் பாம்பு இனங்களைக் கொண்டுள்ளது.
இந்த இனம் இந்தியாவில் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை II-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.