TNPSC Thervupettagam

சீ விஜில் பயிற்சி (SEA VIGIL)

January 26 , 2019 2382 days 741 0
  • 26/11 தாக்குதல் நடந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியக் கடற்படையானது அதன் மிகப்பெரிய கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியான இந்தியக் கடலோரப் பகுதிகளுக்கான கடல் கண்காணிப்புப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியக் கடற்படையானது முன்னதாக மாநிலங்கள் அளவில் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சிகளை ஆண்டுக்கு இருமுறை மேற்கொண்டது.
  • ஆனால் முதன்முறையாக அனைத்துக் கடலோர மாநிலங்கள், தீவு பிரதேசங்கள் மற்றும் அனைத்து மத்திய மற்றும் மாநில அமைப்புகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
  • இது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியக் கடற்படையால் நடத்தப்படும் முக்கிய போர்க்கள நிலையிலான முப்படைப் பயிற்சியான ட்ரோபெக்ஸ் (TROPEX) அளவிற்கு உருவாக்கப்படுகிறது.
  • 26/11 அன்று மும்பையில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் செயல்திறனை முழுமையான அளவில் மதிப்பிடுவதே இதன்  நோக்கமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்