சீன-இந்தியப் பெருங்கடல் விளிம்புப் பகுதி நாடுகள் மன்றம்
December 15 , 2022 1072 days 498 0
இந்தியாவைத் தவிர அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த 19 நாடுகளுடன் இணைந்து சீன-இந்தியப் பெருங்கடல் பிராந்திய மேம்பாட்டு ஒத்துழைப்பு தொடர்பான முதல் உயர் மட்ட சீன-இந்தியப் பெருங்கடல் பிராந்திய மன்றத்தை சீனா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மன்றத்தினைச் சீன சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்பு முகமை (CIDCA) நடத்தி உள்ளது.
சீனா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு இடையே கடல் சார் பேரழிவு தடுப்பு மற்றும் அதற்கான தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு நெறிமுறையை நிறுவுவதற்கு சீனா முன்மொழிந்துள்ளது.