ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை கூட்டு நிலவு (சந்திரன்) விண்வெளி நிலையம் அமைப்பதிற்கானத் திட்டங்களை அறிவித்துள்ளன.
ரஷ்யாவானது சந்திரனின் நிலப்பரப்பில் அல்லது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் உருவாக்கப்பட இருக்கும் சோதனை ஆராய்ச்சி வசதிகளின் ஒரு வளாகத்தை மேம்படுத்துவதற்காக சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம், மாஸ்கோ (ரஷ்யா) ஆனது விண்வெளி ஆராய்ச்சிப் போட்டியில் மீண்டும் முன்னனி வகிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டானது, 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவின் முதலாவது ஆளில்லா விமானத்தின் மூலம் விண்வெளிக்கு யூரி காகரின் சென்ற 60வது ஆண்டின் நினைவு தினத்தைக் குறிக்கின்றது.