TNPSC Thervupettagam

சீனா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் மீது பொருள் குவிப்பிற்கு எதிரான விசாரணை

May 20 , 2021 1547 days 709 0
  • வர்த்தக அமைச்சகமானது சமீபத்தில் சீனா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் மீது பொருள் குவிப்பிற்கு எதிரான விசாரணையைத் தொடங்கியது.
  • இந்த நாடுகளிலிருந்து சூரிய ஆற்றலூட்டப்பட்ட மின்கலங்கள் இறக்குமதி செய்யப்படுவதை எதிர்த்து இந்த விசாரணையானது மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்திய சூரிய ஆற்றல் உற்பத்திக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட ஒரு மனுவைத் தொடர்ந்து வர்த்தக அமைச்சகமானது இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
  • சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஆற்றலூட்டப்பட்ட மின்கலங்கள்  இந்தியாவில் தயாரிக்கப்படுவதைக் காட்டிலும் 15 முதல் 20 சதவீதம் வரை விலை மலிவானவையாகும்.
  • உள்நாட்டில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு சூரிய ஆற்றலூட்டப்பட்ட மின்கலங்கள் தயாரிக்கும் தொழிலை இது வெகுவாக பாதிக்கிறது.
  • இறுதியில் உள்நாட்டில் உற்பத்தியாகும் சூரிய ஆற்றலூட்டப்பட்ட மின்கலங்களின் விலையும் இதனால் அதிகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்