TNPSC Thervupettagam

சீனாவின் அருமண் தனிம ஏற்றுமதி

April 19 , 2025 11 days 50 0
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுங்க வரிகளை விதிக்க முடிவு செய்த சிறிது நேரத்திலேயே, ஏப்ரல் 04 ஆம் தேதியன்று சீனா ஏழு "அருமண்" தாதுக்களின் மீதான ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது.
  • பாதுகாப்பு மற்றும் தூய்மையான எரிசக்தித் துறைகள் உள்ளிட்ட அதிக மதிப்புள்ளப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இந்தத் தாதுக்கள் மிக முக்கியமானவையாகும்.
  • 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து, உலகின் தேவையில் சுமார் 85 முதல் 95 சதவீதம் வரை வழங்குவதன் மூலம் சீனா அருமண் தாதுக்கள் உற்பத்தியில் மிகவும் நிகரற்றப் பெரும் முன்னணித்துவத்தினைக் கொண்டுள்ளது.
  • அருமண் தாதுக்கள் அல்லது அருமண் உலோகங்கள் தனிம வரிசை அட்டவணையில் உள்ள 17 வேதியியல் தனிமங்களின் தொகுப்பாகும்.
  • அருமண் ஆக்சைடு தாதுக்கள் என்பவை சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் (இறங்கு வரிசையில்) காணப்படுகின்றன.
  • ஆனால் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றில் சீனா மற்ற நாடுகளை விட ஒரு முன்னணியில் உள்ளது.
  • சர்வதேச எரிசக்தி முகமை (IEA) ஆனது, சீன நாடு அருமண் உற்பத்தியில் சுமார் 61% மற்றும் அவற்றின் செயல்முறையாக்கத்தில் 92% பங்களிப்பதாக மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்