TNPSC Thervupettagam

சீனாவின் இராணுவ மறுசீரமைப்பு

April 30 , 2024 17 days 40 0
  • சீனா தனது புதிய இராணுவ மறுசீரமைப்பு நடவடிக்கையில் தகவல், விண்வெளி மற்றும் இணைய வெளிப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக புதிய தன்னிச்சையான மக்கள் விடுதலை இராணுவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது.
  • இந்த இராணுவமானது தற்போது – நிலப்பரப்பு, கடற்படை, விமானம் மற்றும் ஏவுகலம் ஆகிய நான்கு கிளைகளைக் கொண்டுள்ளது. அத்துடன் தகவல், விண்வெளி, இணைய வெளிப் பாதுகாப்பு மற்றும் கூட்டு தளவாட ஆதரவு ஆகிய நான்கு முக்கிய துணைப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
  • பழைய உத்திகள் வழங்கீட்டு (துணை) படை என்பது பிரிக்கப்பட்டு மூன்று புதிய பிரிவுகளுடன் கூடிய புதிய படையாக அது மாற்றப்பட்டது.
  • "இராணுவ நவீனமயமாக்கலை விரைவுபடுத்துதல் மற்றும் புதிய சகாப்தத்தில் மக்களின் ஆயுதப் படைகள் என்ற திட்டத்தினை திறம்பட செயல்படுத்துதல்" என்பதை தகவல் உதவிப் படை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2015 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட உத்திகள் வழங்கீட்டு படைகளிலிருந்து நீக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்