சீனா தனது 14வது ஐந்தாண்டு திட்டத்தின் (2021-2025) சுருக்கத்தை முறையாக அங்கீகரித்துள்ளது.
திபெத்தின் யர்லங் ஜாங்போ (Yarlung Zangbo) அல்லது பிரம்மபுத்ராவின் கீழ் பகுதிகளில் முதல் அணையை அமைப்பதும் மற்றும் இந்திய எல்லைக்கு அருகில் சிச்சுவான்-திபெத் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு இரயில் பாதையை அமைப்பதும் இதில் அடங்கும்.
இது விரிவான பட்டை மற்றும் சாலை என்ற முன்னெடுப்பின் ஓர் அங்கமாக துருவப் பட்டுச் சாலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.