TNPSC Thervupettagam

சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்

November 15 , 2021 1353 days 609 0
  • சீனப் பொதுவுடைமைக் கட்சியானது அரிதான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது.
  • இது சீனாவின் மறுமலர்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஒரு தீர்க்கமான முக்கியத்துவத்தினைப் பாராட்டுவதற்கானதாகும்.
  • இது சமூகவாதப் புரட்சி மற்றும் கட்டமைப்புகளுள் ஒன்றாக இந்தக் காலத்தை குறிப்பிடுகிறது.
  • இது சீனப் பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆண்டுகால வரலாற்றில் இது போன்ற 3வது தீர்மானமாகும்.
  • மற்ற இரு தீர்மானங்கள் மா சேதுங் (1945) மற்றும் டெங் சியாபிங்க் (1981) ஆகியோர் தலைமையில் நிறைவேற்றப்பட்டன.
  • மா சேதுங் 1949 ஆம் ஆண்டில் அந்நாட்டில் பொதுவுடைமையாளர்களை அரசு அதிகாரத்திற்குக் கொண்டு வந்தார்.
  • டெங் சியாபிங், 1980 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் சீனாவை ஒரு பொருளாதார ஆற்றல் மையமாக உருவாக்கியது.
  • சீனப் பொதுவுடைமைக் கட்சியானது 2018 ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்காலம் மீதான வரம்புகளை நிராகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்