சீனாவின் விலங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை
June 2 , 2026 12 days 84 0
மனித நோயாளி ஒருவருக்கு பன்றியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஒரே நேரத்தில் மாற்று அறுவை சிகிச்சை செய்து சீனா உலகிலேயே முதல்முறையாக வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உறுப்புகளில் மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரண்டு பன்றி சிறுநீரகங்களும், மரபணு திருத்தம் செய்யப்பட்ட ஒரு பன்றி கல்லீரலும் அடங்கும்.
விலங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது உயிருள்ள செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை ஒரு சிற்றினத்திலிருந்து மற்றொரு சிற்றினத்திற்கு மாற்றுவதாகும்.
மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அந்த உறுப்புகளை நிராகரிப்பதைக் குறைக்கவும், மனிதர்களுடனான இணக்கத்தன்மையை மேம்படுத்தவும் பன்றி உறுப்புகளில் ஆறு மரபணுக்களை அறிவியலாளர்கள் மாற்றியமைத்தனர்.
பன்றியின் உறுப்புகளின் அளவு மற்றும் உடலியல் பண்புகள் மனிதர்களின் பண்புகளைப் போலவே இருப்பதால், அவை விலங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆராய்ச்சியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.