சீன நாடானது, திரவ உப்பினை குளிர்விப்பானாகக் கொண்ட தோரியம் எரிபொருள் உலையில் (TMSR) முதன்முதலில் எரிபொருளைத் தோரியத்திலிருந்து யுரேனியமாக மாற்றுவதை வெற்றிகரமாக அடைந்தது.
ஷாங்காய் பயன்பாட்டு இயற்பியல் நிறுவனம் (SINAP) ஆனது அணு உலையிலிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் சோதனைத் தரவை உறுதிப்படுத்தியது.
திரவ உப்பினைக் குளிர்விப்பானாகக் கொண்ட உலைகளில் தோரியத்தை அணு எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்பதை இந்த சோதனை நிரூபிக்கிறது.
TMSR உலைகள் உப்பினைக் குளிரூட்டியாகப் பயன்படுத்துகின்றன என்பதால், இந்த உலைகளுக்குத் தண்ணீர் தேவையில்லை என்ற ஒரு நிலையில் இவை வளிமண்டல அழுத்தத்திலேயே செயல்படுகின்றன.
சீனா முழுமையான மற்றும் சுயாதீனமான TMSR தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை தொடர்களை நிறுவியுள்ளது.
100 மெகாவாட் திறன் கொண்ட செயல்விளக்க உலையை 2035 ஆம் ஆண்டிற்குள் செயல்பட செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவின் தோரியம் இருப்புக்கள் குறைந்தபட்ச கதிரியக்கக் கழிவுகளுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஆற்றலை வழங்கக் கூடியது.