சீரொளிக் கற்றையைப் பயன்படுத்தும் புதிய ஆளில்லா விமானப் பாதுகாப்பு அமைப்புகள்
November 22 , 2025 6 days 32 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய 16 ஒருங்கிணைந்த ஆளில்லா விமான கண்டறிதல் மற்றும் தடை அமைப்புகளை (IDDS) இந்தியா படையில் இணைக்க உள்ளது.
இந்த அமைப்பு ஆனது, எதிரி நாட்டு ஆளில்லா விமானங்களை 2 கிலோமீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தக் கூடிய 10-கிலோவாட் (kW) திறன் கொண்ட சீரொளிக் கற்றையைப் பயன்படுத்துகிறது.
இது உயர் ஆற்றல் அமைப்புகள் மற்றும் அறிவியல் மையத்தின் (CHESS) கீழ் DRDO அமைப்பின் நேரடி ஆற்றல் ஆயுதங்கள் (DEW) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மார்க்-2 வடிவ அமைப்பானது ஆளில்லா விமானங்களின் உணர்வுக் கருவிகளை முடக்கி அவற்றின் கட்டமைப்பைச் சேதப்படுத்தும்.