சீர்குலைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டமைத்தல் – EU
April 3 , 2024 489 days 385 0
27 நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளில் உள்ள சீர்குலைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான முதல் ஐரோப்பிய ஒன்றிய (EU) சட்டத்தினை ஐரோப்பியப் பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தப் புதியச் சட்டமானது, 2030 ஆம் ஆண்டிற்குள் தனது நாட்டின் 20 சதவீத நிலம் மற்றும் கடல் பகுதிகளைப் புணரமைக்கவும், 2050 ஆம் ஆண்டிற்குள் புணரமைப்பு தேவைப் படும் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற இலக்கினை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நிர்ணயித்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 30 சதவிகிதமும், 2040 ஆம் ஆண்டிற்குள் 40 சதவிகிதமும், 2050 ஆம் ஆண்டிற்குள் 50 சதவிகித சதுப்பு நிலங்களையும் மீட்டெடுக்க வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளுக்கு இசட்டம் அழைப்பு விடுக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குறைந்தபட்சமாக 25,000 கி.மீ. வரையிலான நதிகளை எந்தவொரு கூளங்களும் இன்றி அடைப்பின்றி பாயும் நதிகளாக மாற்ற வேண்டும்.
மொத்த தேசிய நகர்ப்புறப் பசுமைத் தளங்கள் மற்றும் மர விதானப் பரவல் பகுதியில் நிகரப் பாதிப்பு இல்லை என்பதையும் நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.