TNPSC Thervupettagam

சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மத்திய மன்றத்தின் 13வது மாநாடு

October 14 , 2019 2122 days 679 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் புது தில்லியில் சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் மத்திய மன்றத்தின் 13வது மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
  • இதன் நோக்கம் : தேசிய சுகாதார முன்னுரிமைகள் மீது ஒரு கருத்தொற்றுமையை உருவாக்குதல்
  • இம்மாநாடு சுகாதார நலனின் 4 தூண்களின் மீது நடத்தப் பட்டது.
    • அனைவருக்குமான சுகாதார சேவை
    • திட்ட ரீதியிலான செயல்பாடுகள்
    • தரமான மற்றும் அணுகிடும் வகையிலான மலிவான சுகாதார சேவைகள்
    • தகுந்த உள்கட்டமைப்பு
  • இம்மாநாட்டின் போது ‘சுரக்சித் மாத்ரிவ ஆஸ்வாசன்’ என்ற கர்ப்பிணி மற்றும் குழந்தை இறப்புகளை முழுவதும் தடுத்தல் என்ற புதிய திட்டமும், அதற்கான வலைதளம் மற்றும் அதற்கான குறை தீர்ப்பு இணைய வாயிலும் துவங்கப்பட்டன.
  • மேலும் அவர் அம்மாநட்டில் பின்வரும் அறிக்கைகளையும் வெளியிட்டார்.
    • 2019ம் ஆண்டிற்கான தேசியப் பார்வையற்ற மற்றும் பார்வைக் குறைபாட்டு ஆய்வு.
    • தேசிய நீரிழிவு மற்றும் நீரிழிவு காரணமான விழித்திரைப் பாதிப்பு ஆய்வின் மீதான முதல் அறிக்கை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்