TNPSC Thervupettagam

சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

March 29 , 2023 872 days 433 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது (ICMR), உயிரி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் நெறிமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இது "செயற்கை நுண்ணறிவு - அடிப்படையிலான தீர்வுகளின் உருவாக்கம், செயலாக்கம் மற்றும் ஏற்பு ஆகியவற்றில் உதவக் கூடிய ஒரு நெறிமுறைக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • படைப்பாளிகள், மேம்பாட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், நெறி முறைக் குழுக்கள், நிறுவனங்கள், நிதி வழங்கீட்டாளர்கள் மற்றும் நிதியளிப்பு நிறுவனங்கள் உட்பட, உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சுகாதார நலனில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பங்குதாரர்களுக்கும் இந்த ஆவணம் பொருந்தும்.
  • இந்த வழிகாட்டுதல்களின்படி, சுகாதார நலனில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்கான நெறிமுறை மறு ஆய்வு செயல்முறையானது, நெறிமுறைக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்