சுகாதாரத்திற்கான சிந்தனை - டிஜிட்டல் சுகாதார பரப்புரை
July 18 , 2018 2551 days 791 0
இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் (The Organisation of Pharmaceutical Producers of India – OPPI ) #ThinkForHealth என்ற டிஜிட்டல் சுகாதாரப் பரப்புரையை புதுதில்லியில் நடைபெற்ற தனது வருடாந்திர மாநாட்டில் ஆரம்பித்துள்ளது.
#ThinkForHealth என்ற முயற்சி தெலுங்கானா மாநில அரசின் ஒத்துழைப்புடன் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில் பெண்கள் மற்றும் குழந்தை நலம், மனநலம், தொற்றா நோய்கள் மற்றும் சுகாதாரத் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான அணுகுதலை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்குத் தேசிய அளவிலான பரப்புரை அழைப்பு விடுக்கின்றது.
இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநாடு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது.