December 14 , 2025
3 days
34
- ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புறக் குடிநீர் விநியோக அமைப்புகளை நிர்வகிப்பதற்காக ஜல் சக்தி அமைச்சகம் சுஜாலாம் பாரத் செயலியை அறிமுகப் படுத்தியது.
- இந்தச் செயலி ஒவ்வொரு கிராமப்புற நீர் திட்டத்திற்கும் சுஜல் காவ்ன் ID என்ற டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்குகிறது.
- இது பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி சார் தகவல் நிறுவனத்தின் (BISAG-N) ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.
- இந்தச் செயலியானது நீர்சார் வலையமைப்புகள் மற்றும் அமைப்புகளை வரைபடமாக்குவதற்காக PM கதி சக்தி புவியியல் தகவல் அமைப்பு (GIS) உடன் இணைக்கப் பட்டுள்ளது.
- இது நீரின் தரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக கருத்துக்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது.

Post Views:
34