இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் K.M. காதர் மொஹிதீன் தகைசால் தமிழர் விருதைப் பெற்றார்.
இஸ்ரோ தலைவர் V. நாராயணன் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் விருதைப் பெற்றார்.
அர்ஜுனா விருது பெற்ற துளசிமதி முருகேசன், துணிச்சல் மற்றும் துணிவான நடத்தைக்கான கல்பனா சாவ்லா விருதைப் பெற்றார்.
சிறந்த புலனாய்வுப் பணி மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்காக, தமிழக அரசு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை அறிவித்துள்ளது.
விருது பெற்றவர்களில் காவல் துறை ஆய்வாளர் பூரணி (இணையவெளிக் குற்றப் பிரிவு, சென்னை), காவல் துறை ஆய்வாளர் லதா (மனிதக் கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை), மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கல்பனா தத் (தஞ்சாவூர் குற்றப் பிரிவு) போன்ற அதிகாரிகள் அடங்குவர்.