சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினருக்கான ஓய்வூதியம்
September 21 , 2025 14 hrs 0 min 20 0
தமிழக அரசானது, புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கான சிறப்பு ஓய்வூதியத்தினை 500 ரூபாய் அதிகரித்து 10,500 ரூபாயிலிருந்து 11,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகையானது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த முயற்சியின் பயனாளிகளில் மருது பாண்டியர் சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், மன்னார் முத்துராமலிங்க விஜய இரகுநாத சேதுபதி மற்றும் வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் அடங்குவர்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் சந்ததியினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.
தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அரசு ஓய்வூதியம் 1,000 ரூபாய் அதிகரிக்கப் பட்டுள்ளது.
திருத்தப்பட்ட அரசு ஓய்வூதியம் ஆனது மாதத்திற்கு 21,000 ரூபாயிலிருந்து 22,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சார்ந்திருந்தோருக்கான குடும்ப ஓய்வூதியம் 500 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய குடும்ப ஓய்வூதியத் தொகையானது 11,500 ரூபாயிலிருந்து அதிகரிக்கப்பட்டு, மாதத்திற்கு 12,000 ரூபாய் ஆக உள்ளது.