TNPSC Thervupettagam

சுத்தமான கடல் - 2018

December 13 , 2018 2419 days 701 0
  • இந்தியக் கடலோரக் காவல் படையானது போர்ட் பிளேர் கடற்பகுதியில் “சுத்தமான கடல் - 2018” என்ற பெயர் கொண்ட பிராந்திய அளவிலான கடல்சார் எண்ணெய் மாசுக் கட்டுப்பாட்டு எதிர்வினைப் பயிற்சியை நடத்துகிறது.
  • இதன் நோக்கம் இந்தியக் கடலோரக் காவல் படை, எண்ணெய் வள நிறுவனங்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது.
  • மிக முக்கிய எண்ணெய்க் கசிவிற்கு எதிர்வினையாற்ற தயார் நிலையில் இருத்தலானது தேசிய எண்ணெய்க் கசிவுப் பேரிடர் தற்செயல் திட்டத்தின் (NOS-DCP - National Oil Spill Disaster Contingency Plan) சிறப்பம்சங்களுடன் ஒன்றிப் பொருந்துமாறு உள்ளது.
  • இந்தியாவின் கடல்சார் மண்டலங்களின் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கடலோரக் காவற்படையானது பொறுப்பு வகிக்கிறது.
  • இந்தியக் கடற்பகுதியில் எண்ணெய்க் கசிவிற்கு எதிர்வினையாற்றுவதற்கான ஒத்துழைப்பு நிறுவனம் இதுவாகும்.
  • இது (ICG – Indian Coast Guard) NOS-DCP-ஐ உருவாக்கியுள்ளது. மேலும் இது மும்பை, சென்னை மற்றும் போர்ட் பிளேயர் ஆகிய இடங்களில் 3 மாசுக் கட்டுப்பாட்டு எதிர்வினை மையங்களையும் உருவாக்கியுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்