இந்திய வனவிலங்கு நிறுவனத்திடம் (WII) மனித-விலங்கு மோதல் தொடர்பான அதிகரித்து வருதல் தொடர்பான வழக்குகள் குறித்த ஒரு அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய வனவிலங்கு நிறுவனமானது சமீபத்தியப் புலிகள் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது.
மேற்கு வங்காளத்தின் சுந்தரவனப் பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையானது அதன் தாங்கும் திறனை எட்டியிருக்கலாம் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பகைமை வாய்ந்த நிலப்பரப்பில் 100 சதுர கி.மீ.க்கு மூன்று முதல் ஐந்து புலிகள் வரை இருப்பதற்கான திறன் இருப்பதாக மேற்கு வங்க மாநில வனத்துறையிடம் இந்திய வன விலங்கு நிறுவனம் தகவல் அளித்தது.
ஆனால் சுந்தரவனத்தின் பல தொகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கையானது தெரிவித்த அளவை விட அதிகமாக உள்ளது.
இந்த அதிக எண்ணிக்கையானது புதியப் பகுதிகளை தேடி புலிகள் காடுகளை விட்டு வெளியேற வழி வகுக்கும்.
சமீபத்தில், சுமார் எட்டு புலிகள் சுந்தரவனத்தில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்த நிலையில் அவை அனைத்தும் பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டன.
புலிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள வனப்பகுதிகளில் அந்த பிடிபட்ட புலிகளை விடுவிக்குமாறு மேற்கு வங்க மாநில வனத்துறைக்கு இந்திய வனவிலங்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.