சுந்தரவனப் புலிகள் வளங்காப்பகத்தில் கூடுதலாக 1,044.68 சதுர கிலோமீட்டர் பரப்பினைச் சேர்க்க தேசிய வனவிலங்கு வாரியம் (NBWL) ஒப்புதல் அளித்தது.
காப்பகத்தின் மொத்தப் பரப்பளவு ஆனது தற்போது 3,629.57 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளதுடன், இது இந்தியாவின் இரண்டாவது மிகவும் பெரிய புலிகள் வளங் காப்பகமாக மாறியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 5,937 சதுர கிலோமீட்டர் கொண்ட நாகார்ஜுனசாகர் ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகம் இந்தியாவின் மிகப்பெரிய வளங்காப்பகமாக உள்ளது.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மாட்லா, ராய்டிகி மற்றும் ராம்கங்கா மலைத்தொடர்கள் இந்த வளங்காப்பகப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
முதலில் நிர்ணயிக்கப்பட்ட வளங்காப்பகமானது 1,699.92 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மையப் பகுதியையும் 885.27 சதுர கிலோமீட்டர் இடையகப் பகுதியையும் கொண்டிருந்தது.
2022 ஆம் ஆண்டில், வளங்காப்பகத்திற்குள் 81 புலிகளும், தெற்கு 24 பர்கானாக்களின் சுற்றியுள்ள பகுதிகளில் 20 புலிகளும் பதிவாகின.
இந்தியாவில் 58 புலிகள் வளங்காப்பகங்கள் உள்ளன என்பதோடு மேலும் சுந்தரவனக் காடுகள் வளங்காப்பகமானது அளவில் ஏழாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது.
1973 ஆம் ஆண்டு புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த வளங் காப்பகத்திற்குள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட ஒரு தேசியப் பூங்கா அமைந்துள்ளது.