TNPSC Thervupettagam

சுனபேடா வனவிலங்கு சரணாலயம் - மாவோயிஸ்ட் அற்ற நிலை

February 4 , 2026 14 hrs 0 min 13 0
  • சுனபேடா வனவிலங்கு சரணாலயம் ஒடிசாவின் நுவாபடா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது சமீபத்தில் மாவோயிஸ்டுகள் அற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது.
  • மேலும், இங்கு சிறுத்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
  • இந்த சரணாலயத்தில் 70க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் வசிக்கக் கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
  • இது ஒரு முன்மொழியப்பட்ட புலிகள் காப்பகமாகவும் உள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு மாநிலப் புலிகள் கணக்கெடுப்பில் நான்கு புலிகள் பதிவு செய்யப் பட்டன.
  • ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட சமீபத்திய தேசிய அறிக்கை, அங்கு புலிகள் எதுவும் இல்லை என்று கண்டறிந்துள்ளது.
  • இந்தச் சரணாலயம் மகாநதியின் துணை நதியான ஜோங்க் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ளது.
  • இந்தச் சரணாலயம் சுந்தர் மற்றும் இந்திரா ஆகிய ஆறுகளின் மூலமாகவும் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்