இந்திய விண்வெளி வீரர் குழுத் தலைவர் மற்றும் இந்திய விமானப்படை அதிகாரி சுபன்ஷு சுக்லா ஜூலை 15 ஆம் தேதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புவிக்குத் திரும்பினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கி, பூமியை 288 முறை சுற்றி வந்த பிறகு அவர் திரும்பினார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் விண்வெளி நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சர்வதேச மனித விண்வெளிப் பயணமான ஆக்ஸியம்-4 பயணத்தின் ஓர் அங்கமாக அவர் இருந்தார்.
சுபன்ஷு சுக்லா வணிக ரீதியான சுற்றுப்பாதை விண்வெளிப் பயணத்தின் முதல் இந்திய விமானியாகவும், ஒரு தனியார் அமெரிக்கப் பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தினை அடைந்த முதல் இந்தியராகவும் ஆனார்.
இது நாசாவின் உள்கட்டமைப்புடன் கூடிய வணிக ரீதியான விண்வெளிப் பயணத்துடன் இணைத்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முழுமையாக தனியார் குழுவினருடன் அனுப்பப்பட்ட முதல் பயணங்களில் ஒன்றாகும்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் பெட்டகம் இறங்கியது.
இது ஷுக்லாவுடன் சேர்த்து, இந்த பயணத்தின் தளபதியான அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன், போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி - விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகிய நான்கு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்றது.
குழுவினர் ஃபால்கன் 9 ஏவுகலத்தினைப் பயன்படுத்தி ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணம் மேற்கொண்டனர்.
விண்வெளியில் இருந்த காலத்தில், ஷுக்லா ஏழு நுண் ஈர்ப்பு விசை சோதனைகளையும் நடத்தி முடித்தார் மற்றும் பிற திட்டமிடப்பட்ட அறிவியல் ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டார்.
இதில் நீர்க் கரடிகளின் (டார்டிகிரேடு) இந்திய வகை, தசைத் திசு உருவாக்கம், வெந்தயம் மற்றும் பச்சைப்பயறு விதைகளின் முளைப்பு, சயனோபாக்டீரியா, மைக்ரோ ஆல்கா, பயிர் விதைகள் மற்றும் வாயேஜர் காட்சி பற்றிய ஆராய்ச்சி ஆகியவை அடங்கும்.
சுக்லாவின் சோதனைகளில் மிகவும் முக்கியமான ஒன்று, விண்வெளி நுண் ஆல்காக்களின் உணவு, ஆக்ஸிஜன் மற்றும் உயிரி எரிபொருட்களை உருவாக்கும் ஒரு திறன் ஆய்வு ஆகும்.
நுண் ஈர்ப்பு விசையில் நுண் ஆல்காக்களின் தகவமைவு நீட்டிக்கப்பட்ட விண்வெளிப் பயணங்களின் போது மனித வாழ்க்கையை அங்கு நிலை நிறுத்துவதற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
"நீர்க் கரடிகள்" என்றும் அழைக்கப்படும் டார்டிகிரேடுகள், டைனோசர்கள் கிரகத்தில் வாழ்வதற்கு சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, சுமார் 600 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் வலுவான நீர்வாழ் விலங்குகள் ஆகும்.
இந்த விலங்குகளை தகவமைவு கொண்டதாக மாற்றச் செய்வதற்கு காரணமான மரபணுக்களை அடையாளம் காண்பதே இந்தப் பரிசோதனையின் மிகவும் முதன்மை நோக்கமாகும்.