இந்தியாவின் பேரிடர் மேலாண்மைத் துறையில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆற்றிய ஒப்பற்றப் பங்களிப்பையும் தன்னலமற்றச் சேவையையும் அங்கீகரித்துக் கௌரவிப்பதற்கான விருதாகும்.
2023 ஆம் ஆண்டிற்காக, ஒடிசா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (OSDMA) மற்றும் மிசோரம் லுங்கிலி தீயணைப்பு நிலையம் (LFS) ஆகிய இரண்டும் நிறுவனப் பிரிவில், பேரிடர் மேலாண்மையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 2023 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதிற்கு என்று தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளன.