சுமித் நாகல் – ஒலிம்பிக்கின் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற மூன்றாவது இந்தியர்
July 27 , 2021 1455 days 629 0
ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் வெற்றி வெற்ற மூன்றாவது இந்திய டென்னிஸ் வீரர் எனும் பெருமையை சுமித் நாகல் பெற்றுள்ளார்.
25 ஆண்டுகளில் இந்தியா சார்பாக விளையாடி வெற்றி பெற்ற முதல் வீரர் எனும் பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இவர் இப்போட்டியில் டெனிஸ் இஸ்டோமின் என்பவரை முந்தியுள்ளார்.
1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற அட்லாண்டா போட்டிகளில் பிரேசில் நாட்டின் ஃபெர்னான்டோ மெலிகேனி என்பவரை வீழ்த்தி டென்னிஸ் ஒற்றையர் பிரிவினை வென்ற முதல் இந்தியர் எனும் பெருமையை சீஷான் அலி பெற்றார்.
டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றினை கடந்த இரண்டாவது இந்தியர் எனும் பெருமையைப் பெற்றவர் லியான்டர் பயஸ் (Leander Paes) ஆவார்.