TNPSC Thervupettagam

சுய ஆட்சியற்ற பிரதேசங்களில் வாழும் மக்களுக்கான சர்வதேச ஒற்றுமை வாரம் 2026 - மே 25 முதல் 31 வரை

June 3 , 2026 3 days 38 0
  • காலனித்துவ ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் சுய ஆட்சியற்ற பிரதேசங்களில் வாழும் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தல் ஆகியவற்றை இந்த வாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐ.நா. சாசனத்தின் அத்தியாயம் XI-இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, முழுமையான சுய ஆட்சியை இதுவரை அடையாத மக்கள் வாழும் பகுதி, சுய ஆட்சியற்ற பிரதேசம் (NSGT) எனப்படும்.
  • 1999 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்தின் மூலம் இந்த அனுசரிப்பு நிறுவப் பட்டது.
  • தற்போது, ஐ.நா. பட்டியலில் 17 சுயராஜ்யம் அற்ற பிரதேசங்கள் உள்ளன.
  • 2021-2030 வரையிலான தற்போதைய காலகட்டம், காலனித்துவத்தை ஒழிப்பதற்கான நான்காவது சர்வதேச பத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது.
  • காலனித்துவ ஒழிப்பை தனது முக்கிய சாதனைகளில் ஒன்றாக ஐ.நா. கருதுவதுடன் 1945 ஆம் ஆண்டில் காலனித்துவ ஆட்சியின் கீழ் வாழ்ந்த சுமார் 750 மில்லியன் மக்கள் தொகையை இன்று 2 மில்லியனுக்கும் குறைவாக இது குறைத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்