சுய-ஆட்சியை கொண்டிராத ஆட்சிப் பிரதேசங்களின் மக்களுடனான சர்வதேச ஒற்றுமைக்கான வாரம் 2025 - மே 25/31
May 31 , 2025 60 days 43 0
ஐக்கிய நாடுகள் சாசனத்தில், சுய-ஆட்சியைக் கொண்டிராத ஒரு பிரதேசம் என்பது "இன்னும் முழு அளவிலான சுய ஆட்சியை அடையாத மக்களை" கொண்ட ஒரு ஆட்சிப் பிரதேசமாக வரையறுக்கப் படுகிறது.
1946 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா எட்டு உறுப்பினர் நாடுகள், சுய ராஜ்ஜியமற்றவை என்று கருதிய சுமார் 72 பிரதேசங்களை தங்கள் நிர்வாகத்தின் கீழ் பட்டியலிட்டுள்ளன.
இவற்றில் எட்டு பிரதேசங்கள் 1959 ஆம் ஆண்டிற்கு முன்பு சுதந்திரம் பெற்றன.
1960 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், சுமார் 54 பிரதேசங்கள் சுய ஆட்சியைப் பெற்றன.