கொல்கத்தாவின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது கரக்பூரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து தகைவுமின் மூலக்கூறு படிகங்களை (piezoelectric molecular crystals) உருவாக்கியுள்ளது.
இந்தப் படிகங்கள் தனது இயந்திரப் பழுதுகளை இயந்திர மோதல்களால் உருவாகும் மின்னூட்டங்களைக் கொண்டு தாமாகவே பழுது செய்து கொள்கின்றன.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆதரவு பெற்ற இந்த ஆராய்ச்சியானது ‘Science’ எனும் இதழில் வெளியிடப் பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த தகைவுமின் மூலக்கூறு படிகங்கள் பைபிரசோல் கரிமப் படிகங்கள் (bipyrazole organic crystals) என்று அழைக்கப் படுகின்றன.