2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில், 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு கடைபிடிக்கப் பட்டது.
சமூக சீர்திருத்தவாதி ஈ.வே. இராமசாமி அவர்கள் தமிழ் வார இதழான குடியரசு மூலம் இந்த இயக்கத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்.
இது சாதி அமைப்பை ஒழிப்பது, பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவித்தல் மற்றும் பிராமணிய மரபுகளின் ஆதிக்கத்தை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
அதன் நோக்கங்கள் ஆனது நமது குறிக்கோள் மற்றும் திராவிட கழக இயக்கம் ஆகிய இரண்டு துண்டுப் பிரசுரங்களில் கோடிட்டுக் காட்டப் பட்டன.
இந்த இயக்கத்தின் இரண்டு முக்கியப் பெண் தலைவர்கள் அன்னை மீனாம்பாள் மற்றும் வீரம்மாள் ஆகியோர் ஆவர்.
சுயமரியாதை இயக்கம் ஆனது சுயமரியாதைத் திருமணங்கள், விதவைகள் மறுமணம், பெண்களின் சொத்துரிமை, மற்றும் கலப்புத் திருமணங்கள் போன்ற சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
பெரியார் அரசியல் சுதந்திரத்தை விடப் பகுத்தறிவு, பெண் உரிமைகள் மற்றும் சமூக சமத்துவத்தை ஊக்குவித்தார்.
இந்த இயக்கம் பிராமணரல்லாத மக்களுக்கு அதிகாரம் அளித்தது மற்றும் எதிர்காலத் திராவிட அரசியலுக்கான சித்தாந்தத் தளத்தினை உருவாக்கியது.
1916 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி, இதற்கான அடித்தளத்தை அமைத்தது, ஆனால் பெரியார் பரந்த அளவிலான மக்களை அணிதிரட்டும் வரை இது உயரடுக்கினருக்குள் மட்டுமே இருந்தது.
தமிழ்ச் சமூகத்தில் பெரிய கட்டமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும், வேரூன்றிய படிநிலைகளை எதிர்த்து குரலெழுப்புவதற்கும் (கேள்விக்கு உட்படுத்துவதற்கும்) சுயமரியாதை இயக்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.