நிதி ஆயோக் மற்றும் பிரமல் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ‘சுரக்சித் ஹம் சுரக்சித் தும் அபியான்’ எனும் ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளன.
அறிகுறிகளற்ற அல்லது லேசான அறிகுறிகளுடன் கூடிய கோவிட்-19 நோயாளிகளுக்கு வீட்டிலேயே இருந்து குணமடைவதற்கு வேண்டிய சிகிச்சை முறையிலான உதவிகளை வழங்குவதற்காக என்று இந்த இயக்கமானது தொடங்கப் பட்டு உள்ளது.
இது 112 உயர் லட்சிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்திற்கு பிரமல் அறக்கட்டளையால் உதவிகள் வழங்கப் பட உள்ளது.
இந்த நிறுவனமானது அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) மற்றும் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டி மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றும்.