TNPSC Thervupettagam

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மசோதா 2025

August 16 , 2025 15 hrs 0 min 20 0
  • மக்களவையானது, 1957 ஆம் ஆண்டு சட்டத்தைப் புதுப்பிப்பதற்காக 2025 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • குத்தகைதாரர்கள், முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் ஏற்கனவே உள்ள குத்தகையில் கூடுதல் கனிமங்களைச் சேர்ப்பதற்கு மாநில ஒப்புதலைப் பெற இந்த மசோதா அனுமதிக்கிறது.
  • முக்கியக் கனிமங்களில் லித்தியம், கிராஃபைட், நிக்கல், கோபால்ட், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை அடங்கும் என்ற நிலையில் அவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சாரம் சார்ந்த போக்குவரத்து/இயக்கத்திற்கு இன்றியமையாதவை.
  • சுரங்கங்கள் மற்றும் கனிமங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் பங்கை இந்த மசோதா விரிவுபடுத்துகிறது.
  • உரிமம் சார்ந்தச் சுரங்கங்களில் இருந்து கனிமங்களை விற்பனை செய்வதற்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளதுடன், இறுதிப் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு முழு வணிகப் பயன்பாட்டையும் இது அனுமதிக்கிறது.
  • கனிமப் பரிமாற்றங்களைப் பதிவு செய்து ஒழுங்குபடுத்துவதற்காக என்று ஒரு புதிய ஆணையம் அமைக்கப்படும் என்பதோடு இது இந்தத் துறையில் அதிக வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்