சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட முதலாவது இரயில் நிலையம்
October 23 , 2018 2397 days 714 0
இந்தியாவிலேயே முதல்முறையாக சுரங்கத்திற்குள்ளேயே கட்டப்படும் இரயில் நிலையம் இமாச்சலப் பிரதேசத்தில் வரவுள்ளது.
கெய்லாங் நிலையம் என்று பெயரிடப்பட்ட இந்த நிலையமானது இந்திய-சீன எல்லைக்கருகில் உள்ள பிலாஸ்பூர்-மணாலி லே தடத்தில் கட்டப்படவுள்ளது.
டெல்லி மற்றும் பிற நகரங்களில் உள்ள பல மெட்ரோ நிலையங்கள் சுரங்கங்களின் உள்ளே அமைந்துள்ளன. ஆனால் சுரங்கப் பாதைக்கு உள்ளேயே இரயில்வே அமைப்பு அமைவது இதுவே முதன்முறையாகும்.