சுர்ச்சுவே மருந்திற்கு உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல்
August 24 , 2023 729 days 354 0
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஆனது (FDA) வயது வந்தவர்களில் நிலவும் மகப்பேற்றுக்குப் பிறகான மனச்சோர்வு (PPD) சிகிச்சைக்காக சுர்ச்சுவே (சுரானோலென்) மருந்தினைப் பயன்படுத்துவதற்கு அங்கீகரித்துள்ளது.
PPD என்ற ஒரு நிலையானது அதனை எதிர்கொள்ளும் பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.
கர்ப்ப காலத்திற்குப் பிறகு ஒரு இயல்பான வாழ்வியல் நடவடிக்கைகளுக்குத் திரும்பச் செய்வதற்கான அவர்களின் திறனை இந்த நிலை மோசமாக தடுக்கிறது.