சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் செயல்முறையில் மாற்றங்கள்
April 21 , 2022 1201 days 471 0
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகமானது, மேம்பாட்டுத் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் செயல்முறையில் சில மாற்றங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
அதே சமயம் இதர சில திட்டங்களுக்கு இதன் அதிகார வரம்பிலிருந்து முற்றிலும் விலக்கு அளிப்பதற்கு இது முன்மொழிந்துள்ளது.
இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதில் 39 வகையான மேம்பாட்டுத் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் என்பது கட்டாயமாகும்.
அவற்றுள் நீர்மின் நிலையம், சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் போன்றவை உள் அடங்கும்.
இந்த அனுமதி வழங்கல் செயல்முறையானது 2006 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டது.