- இது தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகளாவிய அளவுகோலாகும்.
- மேலும், ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் நோக்கங்கள் போன்ற உலகளாவிய நிலைத்தன்மை இலக்குகளை அடைவதில் நாடுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய பகுப்பாய்வுக் கருவியாகவும் இது செயல்படுகிறது.
- இது மெக்கால் மெக்பெய்ன் அறக்கட்டளையின் ஆதரவுடன் யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது.
- இதன் உள்ளடக்கம், மூன்று முக்கிய நோக்கங்களின் கீழ் 177 நாடுகள், 47 குறிகாட்டிகள் மற்றும் 12 சிக்கல் பிரிவுகளை உள்ளடக்கும்.
- சுற்றுச்சூழல் சுகாதாரம், சூழல் மண்டலத்தின் உயிர்ச்சக்தி மற்றும் பாவநிலை மாற்றம் ஆகியவையே மூன்று முக்கிய கொள்கை நோக்கங்கள் ஆகும்.
சுற்றுச்சூழல் சுகாதாரம்
- காற்றின் தரம் (PM2.5 போன்ற மாசுபடுத்திகளின் வெளிப்பாட்டை அளவிடுதல்)
- சுகாதாரம் மற்றும் குடிநீர்
- கன உலோகங்களின் வெளிப்பாடு
சூழல் மண்டலத்தின் உயிர்ச்சக்தி
- பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பு
- காடுகள் மற்றும் மர இழப்பு
- மீன்வளம் மற்றும் மீன் இருப்பு
- வேளாண்மை மற்றும் நிலையான நடைமுறைகள்
- நீர் வளங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு
பருவநிலை மாற்றம்
- பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல்
- பல்வேறு துறைகளிலிருந்து வெளியாகும் CO2 வெளியேற்றம்
- தூய்மையான ஆற்றல் மாற்றம் மற்றும் கார்பன் அடர்த்தியைக் கண்காணித்தல்
- முதல் இடங்கள் – எஸ்டோனியா (1வது, மதிப்பெண் 74.79); அதனைத் தொடர்ந்து லக்சம்பர்க், இங்கிலாந்து, பின்லாந்து, நெதர்லாந்து (முதல் 5 இடங்கள் – அனைத்தும் ஐரோப்பாவைச் சேர்ந்தவை).
- இந்தியா 176வது இடத்தில் (மதிப்பெண் 22.46) உள்ளது, இது இரண்டாவது மிகக் குறைந்த மதிப்பெண் ஆகும்; கடுமையான காற்றின் தரம் மற்றும் பல்லுயிர் தன்மை இழப்பு.
- 2022 ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (EPI) மிக மோசமாகச் செயல்படும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
- சுற்றுச்சூழல் சுகாதாரம், காற்றின் தரம் மற்றும் பல்லுயிர் தன்மை ஆகியவற்றில் இந்தியா மோசமாகச் செயல்பட்டுள்ளது (காற்றின் தரம் மற்றும் பல்லுயிர் தன்மை ஆகிய இரண்டிலும் 174வது இடத்தில் உள்ளது).