TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

June 8 , 2022 1158 days 754 0
  • நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்குச் சரணாலயம் ஆகியவை அவற்றின் வரையறுக்கப்பட்ட எல்லையில் இருந்து தொடங்கி குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் வரையில் சுற்றுச் சூழல் தாங்கு மண்டலங்களைக் கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இது பாதுகாக்கப்பட்டப் பகுதிகளுக்கு ஒருவித "தாங்கு மண்டலத்தினை" உருவாக்கச் செய்வதற்கானதாகும்.
  • இந்த மண்டலங்கள் உயர் பாதுகாப்பு உடைய பகுதிகளிலிருந்து குறைந்தப் பாதுகாப்பு உள்ள பகுதிகள் வரையிலான பகுதிகளுக்கு மாற்று நிலை மண்டலமாக செயல்படும்.
  • மத்திய அரசானது 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்கள் குறித்த  வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் ஏற்புத் தன்மையின் அடிப்படையில் இதற்காக 10 கிலோமீட்டர் எல்லையை அது பரிந்துரைத்தது.
  • 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தில், "சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்கள்" என்ற வார்த்தை குறிப்பிடப் படவில்லை.
  • 2002 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்பு உத்தியில் வழங்கப்பட்டுள்ளபடி ஒரு சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்கள் என்பவை ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியைச் சுற்றி 10 கிலோமீட்டர்கள் வரையிலான வரம்பினைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்