TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி விதிகள் 2026

January 25 , 2026 2 days 31 0
  • 2026 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) நிதியின் பயன்பாடு மற்றும் நிர்வாகத்திற்கான விரிவான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்த நிதி 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழங்கப் படுகிறது.
  • ஜன் விஸ்வாஸ் சட்டம், 2023 மூலம் வலுப்படுத்தப்பட்ட இது குற்றங்களை குற்றமற்றதாக்கியது, ஆனால் பண அபராதங்களைத் தக்க வைத்துக் கொண்டது.
  • மாசுக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் கண்காணிப்புக்காக சேகரிக்கப்பட்ட அபராதங்களை இந்த நிதி பயன்படுத்துகிறது.
  • இது சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் நிர்வகிக்கப் படுகிறது.
  • இந்த நிதி மாசுபாட்டைக் குறைத்தல், தூய்மையான தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்