சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான உலகின் மிகப்பெரியப் பூங்கா
October 8 , 2022 1179 days 531 0
குருகிராமில் அமைந்த ஆரவல்லி மலைத்தொடரில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான உலகின் மிகப்பெரியப் பூங்காவை உருவாக்க இரண்டு சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது, ஆப்பிரிக்காவினை அடுத்து, சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான மிகப்பெரியப் பூங்கா ஷார்ஜாவில் அமைந்துள்ளது.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த ஆரவல்லி பூங்கா அதை விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும்.
இதில் ஊர்வன மற்றும் இருவாழ்விட வாழ்விகளுக்கான கண்காட்சித் தளம், பறவைக் கூடம்/ பறவைப் பூங்கா, புலிகளுக்கான நான்கு மண்டலங்கள், தாவர வகைகளுக்கான ஒரு பெரிய பகுதி, வெளிநாட்டுப் பறவைகளுக்கான ஒரு பகுதி, கடல் வாழ் உயிரினங்கள், இயற்கை வழித் தடங்கள், சுற்றுலா மண்டலங்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் ஆகியவை உள்ளடங்கும்.