சுற்றுப்பாதைக் கண்காணிப்பு - அஜிஸ்டா செயற்கைக்கோள்
February 12 , 2026 176 days 214 0
உள்நாட்டுச் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) படம் பிடித்ததன் மூலம் அஜிஸ்டா ஸ்பேஸ் இந்தியாவின் முதல் சுற்றுப்பாதையில் படம் பிடிக்கும் ("சுற்றுப்பாதையில் உளவு பார்த்தல்") திறனை அடைந்துள்ளது.
இந்தச் செயல் விளக்கம் ABA First Runner (AFR) செயற்கைக்கோளைப் பயன்படுத்தி மேற் கொள்ளப் பட்டது.
இந்தச் செயற்கைக்கோள் ஜூன் 2023 இல் ஸ்பேஸ்எக்ஸ்-இன் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
AFR என்பது அஜிஸ்டா ஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 80 கிலோ எடையுள்ள புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
புவியின் தாழ் மட்டச் சுற்றுப்பாதையில் (LEO) சுமார் 250–300 கிமீ தூரத்திலிருந்து படப் பிடிப்பு மேற்கொள்ளப் பட்டது.