மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது சுற்றுப் புறத்தை மேம்படுத்துதல் தொடர்பான சவாலிற்காக வேண்டி 25 நகரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இது பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் செயல்படவுள்ளது.
இது ஒரு 3 ஆண்டு கால முன்னெடுப்பாகும்.
இது பொது இடங்கள், போக்குவரத்து, சுற்றுப்புறத் திட்டமிடல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு என்று ஒரு சோதனை முயற்சியாக இந்திய நகரங்கள் மற்றும் அதன் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இது நகர நிறுவனங்களிடையே தரவு மேலாண்மை மற்றும் ஆரம்பக் கால குழந்தை நல சேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இந்திய நகரங்களிடையே குழந்தைகளின் ஆரம்ப காலச் சூழலை மையமாகக் கொண்ட அணுகுமுறை குறித்து பிரச்சாரம் செய்கின்றது.