TNPSC Thervupettagam

சுற்றுலா நேரம் – 9 மணி வரை

August 1 , 2019 2535 days 1393 0
  • இந்தியா முழுவதும் மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ள 10 நினைவுச் சின்னங்கள் காலை சூரிய உதயத்திலிருந்து இரவு 9 மணி வரை பொது மக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும் என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பிரகலாத் பட்டேல் அறிவித்துள்ளார்.
  • பொது மக்களுக்காக பெரும்பாலான நினைவுச் சின்னங்களின் நுழைவு வாயில்கள் 5.30 – 6.00 மணிக்குள் மூடப்பட்டு விடுகின்றன.
  • இந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல் பின்வருமாறு:

டெல்லியில் உள்ள உமாயூன் சமாதி

புவனேஷ்வரில் உள்ள ராஜாராணி ஆலயம்

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் சமாதி

கஜுராஹோவில் உள்ள துல்ஹாதேவ் ஆலயம்

குருஷேத்திராவில் உள்ள ஷேக் சிலி சமாதி

மகாராஷ்டிராவில் உள்ள ஆலயக் குழுக்கள் (மார்க்கந்தா)

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மன் மஹால் (வாரணாசி)

குஜராத்தின் பாட்டனில்  உள்ள ராணி கீ வாவ்

கர்நாடகாவில் உள்ள கோல் கும்பாஸ்

கர்நாடகாவில் பட்டாடக்கல்லில் உள்ள நினைவுச் சின்னங்கள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்