TNPSC Thervupettagam

சுற்றுலாப் பயணிகளுக்காக சியாச்சின் பகுதி திறப்பு

October 24 , 2019 2098 days 663 0
  • தற்பொழுது சியாச்சின் பகுதியானது சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாவிற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
  • மேலும் இவர் கிழக்கு லடாக்கில் உள்ள ஷியோக் ஆற்றின் மீது அமைந்த உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாலத்தையும் திறந்து வைத்தார்.
  • ‘படைத் தளபதி செவாங் ரிஞ்சன் சேது’ என்ற ஒரு பாலமானது லடாக் பிராந்தியத்தின் முன்னணிப் பகுதியில் 14,650 அடி உயரத்தில் எல்லை சாலைகள் அமைப்பால் (Border Roads Organisation - BRO) கட்டப்பட்டுள்ளது.
சியாச்சின் பற்றி
  • சியாச்சின் பனிப் பாறையானது உலகின் மிக உயர்ந்த போர்க் களமாகும்.
  • இது இமயமலையின் கிழக்குக் காரகோரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பனிப் பாறையாகும்.
  • காரகோரம் சில சமயங்களில் "மூன்றாவது துருவம்" என்று அழைக்கப்படுகின்றது.
  • இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு முடிவடையும் பகுதியான NJ9842ன் வடகிழக்கில் உள்ளது.
  • 2004 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் இப்பகுதிக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார்.
  • 2005 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன் சிங் இப்பகுதிக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது இந்தியப் பிரதமராக உருவெடுத்துள்ளார்.
  • அதன் பின்னர் தற்போதைய இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியும் இந்தப் பகுதிக்கு 2014 ஆம் ஆண்டில் பயணம் மேற்கொண்டார்.
  • இந்திய இராணுவம் 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சியாச்சினுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதித்தது. இந்த சியாச்சின் பயணங்கள் 1984 ஆம் ஆண்டில் மொத்தமாக நிறுத்தப்படும் வரை தொடர்ந்தது.
  • 1984 ஆம் ஆண்டில், ஒரு இராணுவ நடவடிக்கையான “மேக்தூத் நடவடிக்கையை” இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையானது சியாச்சின் பனிப்பாறை முழுவதையும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்