மிகப் பழமையான படியெடுத்தல் என்ற முறையில் கையினால் வரையப்பட்ட ஒரு ஓவியமானது காலநிலை மாற்றம் காரணமாக தீவிரமான நிலையில் சிதைந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தோனேசியாவிலுள்ள சுலவேசி தீவில் 45,000 வருடங்களுக்கும் மேல் பழமையான குகை ஓவியங்கள் உள்ளன.
சிவப்பு மற்றும் மல்பெர்ரி நிறமிகள் மூலம் வரையப்பட்ட இந்தப் பண்டைய குகை ஓவியங்களாவன வரலாற்றுக்கு முந்தைய காலத்தினைச் சேர்ந்த கலைகளில் முதன்முதலில் அறியப்பட்ட காட்சி ஓவியங்களாக திகழ்கின்றன.