சுழற்சி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் திட்டம்
February 10 , 2023 919 days 400 0
இந்திய அரசானது, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்புடன் இணைந்து இந்தியாவில் ‘சுழற்சி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இது "கழிவிலிருந்து வளத்தினை உருவாக்குதல்" திட்டம் ஆகும்.
சுற்றுச்சூழலின் மீது ஜவுளித்துறை ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பாலிஸ்டர் போன்ற செயற்கைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
பாலிஸ்டர் சிதைவடையாத ஒரு வகை நெகிழியாகும்.
ஜவுளிப் பொருட்களின் மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டை ஊக்குவிக்கச் செய்யும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
உலக ஜவுளிக் கழிவுகளில் இந்தியாவிலிருந்து வரும் ஜவுளிக் கழிவுகள் 8.5% ஆகும்.
இந்தியாவில் ஆண்டுக்கு 7800 கிலோ டன் ஜவுளிக் கழிவுகள் குவிகின்றன.