2021 ஆம் ஆண்டின் சுவச் சர்வேக்சன் ஆய்வின் 6வது பதிப்பானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி அன்று நடத்தப்பட இருக்கின்றது.
பிரேரக் தாவுர் சம்மான் என்ற ஒரு புதிய வகை விருதானது 2021 ஆம் ஆண்டின் சுவச் சர்வேக்சன் ஆய்வில் சேர்க்கப்பட இருக்கின்றது.
இந்தப் பிரிவானது 5 துணைப் பிரிவுகளைக் கொண்டிருக்கும். அவையாவன : பிளாட்டினம் (திவ்லா), வெண்கலம் (உதித்), வெள்ளி (உஜ்வால்), தங்கம் (அனுபம்), இலக்கை அடையும் (அரோகி) ஆகியனவாகும்.
இந்த ஆய்வானது நகர்ப்புறத் துப்புரவை மேம்படுத்துவதற்கு வேண்டி நாடு முழுவதும் உள்ள நகரங்களை ஊக்கப்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
2017, 2018 மற்றும் 2019 ஆகிய 3 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தூர் நகரானது இந்தியாவின் தூய்மையான நகராக விளங்குகின்றது.