சுவச் பாரத் மிஷன் நகர்ப்புறம் 2.0 மற்றும் AMRUT 2.0
October 3 , 2021 1445 days 565 0
2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதுப்பிப்பு மற்றும் நகர மாற்றத்திற்கான அடல் திட்டத்தின் 2வது பதிப்போடு சுவச் பாரத் திட்டம் நகர்ப்புறம் 2.0 என்ற திட்டத்தினையும் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டங்கள் புதுடெல்லியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொடங்கப் பட்டன.
அனைத்து நகரங்களையும் குப்பைகள் அற்றவையாகவும் அவற்றைத் தண்ணீர்ப் பற்றாக்குறை அற்றவையாக மாற்றும் உயர்நோக்கினைப் பூர்த்தி செய்வதற்காகவும் வேண்டி இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.